பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் ஆதரவு குரல் பலமாக ஒலித்து வருகின்றன.
இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான 4 குற்றவாளிகளான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டார். தற்போது இவர்கள் நான்கு பெரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர்.
மேலும் கொடூரகுற்றவாளிகளில் ஒருவரான திருநாவுக்கரசுவை ஜாமீனில் விடுவிக்கக்கோரி, அவரது தாயார் செல்வி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் வழங்க மறுத்ததோடு, மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்கை குறித்து விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது.