செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள நின்னக்கரை ஏரியைச் சுற்றிய பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கழிவு நீர் கலப்பதால் மண்ணின் தரம், ஏரி மாசு மற்றும் அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்நிலையில் கடந்த 2018ல் நின்னக்கரை ஏரியைப் பாதுகாக்கக்கோரி இளங்கோவன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வுல் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நேரில் ஆஜரானார்.


அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டுவதில் மூலம் வாரியம் தொடங்கப்பட்டதின் நோக்கம் அர்த்தமற்றதாகிறது எனவும் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | வேலூரா வெயிலூரா... அடம்பிடிக்கும் சூரியன்..!


அதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சட்ட விதிகளை பின்பற்றாத உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீடு கோர தொடங்கியுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் உயர் அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க | ‘காடு’ யானைகளின் நிலம் அல்லவா மனிதர்களே.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR