அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது...


வரும் மார்ச் 1-ஆம் நாள் குமரி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் அன்றைய தினம் 11 மணியளவில் மோடியின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இச்செய்தியினை உறுதி படுத்திய பொன்.ராதா அவர்கள், தமிழகத்திற்கு நலத்திட்டங்களை வழங்க வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என வைகோவுக்கு வெளிப்படையான வேண்டுகோள் வைத்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர்., விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதிக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், பாரதிய ஜனதா கூட்டணியை ‘பி’ அணி என்றும், தமிழகத்தில் நாங்கள்தான் ‘ஏ’ அணி என்றும் கமல்ஹாசன் கூறி வருகின்றார். சினிமாவில் தான் ‘ஏ’, ‘யூ’ என்று சான்றிதழ் கொடுப்பார்கள். அவர் எந்த அர்த்தத்தில் கூறுகின்றாரா என்று தெரியவில்லை. 


தமிழக குடும்பங்களின் கூட்டணிதான் எங்கள் கூட்டணி. எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் வரும் இணையும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.