இந்த ஆண்டு தீபாவளிக்கு அரசு ஊழியகளுக்கு மட்டும் இல்லை மக்களுக்கும் போனஸ் வழங்குகிறது புதுவை அரசு... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரும் தீபாவளி பண்டிகையை வருவதை அடுத்து மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அனைத்து மாநில அரசும் பலவேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக குடும்ப அட்டை வாரியாக மானியம் மற்றும் சர்க்கரை போன்றவற்றை அரசு தீபாவளி மற்றும் பொங்கலுக்கு வழங்குவது வழக்கம்.   


இந்நிலையில், புதுவை அரசு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் களுக்கும் இலவச சர்க்கரை, துணிகளுக்கு பதிலாக ரூ.1000 ரொக்க பணத்தை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளது. இதுபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் துணியை கணக்கிட்டும் அதற்கான பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசியையும் ரொக்க பணமாக வழங்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து, புதுவை அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச கைலி, சேலை, 2 கிலோ சர்க்கரை ஆண்டுதோறும் வழங்கப்படும்.


இந்த ஆண்டு ரொக்க பணமாக வழங்க MLA-க்கள் வலியுறுத்தி உள்ளனர். காலம் கடந்துவிட்டதால் டெண்டர் வைத்து பொருட்களை வழங்க முடியாது என்பதால் இந்த முறைக்கு அரசும் சம்மதித்துள்ளது. இதனடிப்படையில் ஒரு செட் துணி, 2 கிலோ இலவச சர்க்கரைக்கு ஈடாக பிற சமூகத்தினரின் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ.ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளோம்.


தாழ்த்தப்பட்டோருக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு செட் துணி வழங்கப்படும். இந்த ஆண்டு ஒரு செட் துணிக்கு ரூ.822, சர்க்கரைக்கு ரூ.80 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தொகை ரேசன் கார்டுதாரர்களின் குடும்ப தலைவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


மேலும், சிகப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரைக்கு பதிலாக ரூ.1,275 தரப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.675 வங்கிகணக்குகளில் செலுத்தப்படும். சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச துணிக்கு பதிலாக ரூ.1,000 வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இந்த தொகை ஓரிருநாளில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 


புதுவை அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் அனைவரும் இந்த வருட  தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.