Pongal 2022: முகூர்த்த காலுடன் தொடங்கியதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி?
அரசு விழாவாக நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் இல்லை!
மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் துவங்கின. வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடப்பட்டதுடன், போட்டிகளுக்கான நடைமுறை தொடங்கியது.
400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக முகூர்த்த கால் நடுவது, பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் அனுசரிக்கப்படுகிறது.
வழக்கம்போலவே, வரும் 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போட்டி ஏற்பாட்டுக் குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால், நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கையும் விதித்துள்ளது.
ALSO READ:ரேஷன் கடைகளில் பனை வெல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த இனிப்பு செய்தி!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நிபுணர்களை சந்தித்து கலந்தாலோசனை (Corona Restrictions) நடத்தவிருக்கிறார். எனவே, அந்த கூட்டத்திற்கு பிறகுதான், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா இல்லையா என்பது உறுதியாகத் தெரியும்.
தமிழ் நாட்டில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அரசு இன்று வரையிலான கட்டுப்பாடுகளையே அறிவித்திருந்த நிலையில், இன்று புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா, அரசின் சார்பில், அரசு விழாவாகவே நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு மெளனம் காத்து வரும் நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக முகூர்த்த கால் நடப்பட்டுள்ளது.
ALSO READ | இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?
வழக்கமாக முகூர்த்த கால் நடும் விழாவில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொள்வார்கள். இன்றைய விழாவில் அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முகூர்த்தக்கால் நட்டாலும், அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என அரசு அறிவுறுத்தினால், அதன்படி போட்டிகளை நடத்துவோம் என்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, முதலமைச்சரின் இன்றைய கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் (Corona Restrictions), அதையடுத்து வெளியாகவிருக்கும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளும் அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | தமிழகத்தில் முழு ஊரடங்கு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR