ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூபாய் பெற முடியும்
பொங்கல் பரிசு ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000 பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000 பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு ஆகிய பொருட்களுடன் ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது.
கடந்த நவம்பர் 29 அன்று சென்னையில் நடந்த பொங்கல் பரிசு பேக்கேஜிங் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi k Palaniswami) பொங்கல் பரிசு வழங்குவதை தொடங்கி வைத்தார். அன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரிசி பெறும் 2.5 கோடி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000. நியாய விலைக்கடைகளில் இலவச பொங்கல் பரிசு மூட்டைகளை வழங்க தமிழக அரசு நிர்ணியம் செய்துள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அதனுடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் இருக்கும். அன்று முதல் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு (Pongal Gift) வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 சேர்த்தே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவும் 1,000 பணத்தை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வெளிப்படையாக வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும். ரேஷன் அட்டையில் பெயர் இல்லாதவர்கள், பெயர் உள்ளவர்களில் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ, அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (‘பாஸ்வேர்டு’) வைத்தோ தான் பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.