ஜெயலலிதா நலம் பெற ஜனாதிபதி வாழ்த்து!!
தீவிர மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா.
முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் தகவல் வந்த வண்ணம் இருந்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரி சேர்மன் பிரதாப் சி.ரெட்டி மூன்று முறை ஜெயலலிதா குணம் அடைந்து வருவதாக கூறினார். கடந்த 73 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய செயல்பாட்டிற்காக செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. நுரையீரல் மற்றும் இதயம் சீராக செயல்பட மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் நேற்று மாலை முதல் குவிந்த வண்ணம் உள்ளனர்
இந்நிலையில் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய பிராத்தனை செய்வதாக தங்கள் சமுக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி :- ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை கேட்டு வேதனை அடைந்துள்ளேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.