#Metoo பிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும் என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

#MeToo என்னும் ஹாஸ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து உலகெங்கிலும் உள்ள பெண்கள் தெரிவித்து வருகின்றநிலையில், சமீபத்தில் பாலிவுட் திரையுலகினை கதிகலங்க வைத்த இந்த வழக்கம், தற்போது தமிழகத்தையும் எட்டியுள்ளது. 


தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறி இருந்தார். இதற்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


இதை தொடர்ந்து, #MeToo குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது திமுக எம்.பி.கனிமொழி #MeToo தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில், #Metoo பிரச்சாரம் ஒரு விவாதத்தை ஆரம்பித்து மக்களைத் தோற்றமளிக்க வேண்டும். உண்மையை உலகிற்கு தெரிவிக்க வேண்டும். இது பாலியல் சுரண்டலை நிறுத்துவதற்கு ஒரு படி.


பலரின் முகத்திரைகளை கிழிக்கும் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும். #MeTooபிரச்சாரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும். குற்றவாளிகள் சோதனையிலும் பாதிக்கப்பட்டவர்களிலும் வைக்கப்படட்டும் என பதிவிட்டுள்ளார்.