தமிழகத்தில்  தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது சவருக்கு ரூபாய் 248 குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.


அந்த வகையல் தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் தங்கள் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.528 அதிகரித்து இருந்தது. குறிப்பாக கடந்த 8-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது.


 இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கம் விலை நேற்று குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3,142-க்கும், ஒரு பவுன் ரூ.25,136-க்கும் விற்பனை ஆனது.


நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.31-ம், சவரனுக்கு ரூ.248-ம் அதிரடியாக குறைந்து, ஒரு கிராம் ரூ.3,111-க்கும், ஒரு பவுன் ரூ.24,888-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.25000 கீழ் மீண்டும் சென்றுள்ளது.


தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு 40 காசும், கிலோவுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் 39 ரூபாய் 90 காசுக்கும், ஒரு கிலோ ரூ.39 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது.