இறைவனை போல் சிலையாக மாறவேண்டும் என்ற மூட நம்பிக்கையில் கோவில் கருவறையில் நான்கு மணிநேரம் காத்திருந்த சிறுமி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரந்த உலகத்தில் அதிசயமான, ஆச்சர்யமூட்டும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் ஆன்மீக நம்பிக்கையில் பலரும் பல விதமான முட்டாள் தனமான நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று திருச்சியில், சிறுமி ஒருவர் தான் இறைவனாக வேண்டும் என்ற எண்ணத்தில், கோவில் கருவறைக்குள் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திருச்சியில் உள்ள மணமல்குடிக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோரை போன்று அவரது குழந்தைக்கும் ஆன்மீகத்தில் மூட நம்பிக்கை அதிகம். குழந்தையின் பெற்றோருக்கு தனது குழந்தை எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று என்று தெரிந்து கொள்ள ஆர்வம். 


இதையடுத்து, அவர்கள் அருகில் இருந்த கிராமத்தில் உள்ள ஒரு ஜோதிடரை அணுகியுள்ளனர். அப்போது அவர் கூறியுள்ளார்; உங்கள் மகள் வருங்காலத்தில் ஒரு அழகான சிலையாக மாறுவாள் என்று கூறியுள்ளார். அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் அவர்களுடம் கூறியுள்ளார். 


இதை தொடர்ந்து, 6 ஆம் வகுப்பி படிக்கும் 12 வயதுடைய தனது மகளுக்கு கடந்த ஜூலை 2 ஆம் தேதி புடவை உடுத்தி, மல்லிகை மலர்களை சிறுமிக்கு சூடி, வளையல்கள் அணிவித்து, திங்கள் கிழமை காலை வடக்கூர் அம்மன் கோயிளுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அந்த சிறுமியை அவர் பெற்றோர் கோவில் கருவறையில் தனியாக அமர வைத்துள்ளனர். அந்த சிறுமியும் சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேல் அங்கேயே காத்திருந்துள்ளார்.


நான்கு மனை நேரத்திற்கு பின்னரும் எந்த மாற்றமும் தோன்றவில்லை. இதையடுத்து, அந்த கோவில் பூசாரி அவர்களிடம், இது உங்களின் மூட நம்பிக்கை, இவர் சிலையாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. தயவு செய்து இங்கிருந்து கிளம்புங்கள் என்று அவர் கூறியுள்ளார்.      
 
இதையடுத்து, செய்வாய் கிழமை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வை சிறார் நீதி (JJ) சட்டத்தின் கீழ் குழந்தை உரிமைகள் மீறல் கூறிய ஒரு செயல் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை சித்து வருகின்றனர். குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு மாநில ஆணையம் (TNSCPCR) இந்த சம்பவத்தை கண்டனம் தெரிவித்துள்ளது. "சிலர் தங்கள் பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரில் பணம் சம்பாதிக்கிறார்கள். கமிஷன் சரியான நடவடிக்கையை எடுக்கும் "என்று பி.மோகன், கமிஷனின் உறுப்பினர் கூறினார்.