ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை கண்டித்தும், நிரந்தரமாக  ஆலையை மூட வலியுறுத்தியும்  தூத்துக்குடி பகுதி  மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவன தரப்பில் ஆலையை புதுப்பிக்கக்கோரி,  தமிழ்நாடு  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம்  ஒரு மனு அளிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் விபரங்கள் வேண்டும் என கூறி அந்த மனுவை நிராகரித்துள்ளது. ஸ்டெர்லைட் வேதாந்தா குழு நிறுவனம், பங்குச்சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் தனது அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.


64 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்தில் சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம், சில்வர்புரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர். வியாபாரிகள், மாணவர்கள், சமூக அமைப்புகள், லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிவருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயம் முன்பாக நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் வாஸ் மற்றும் சைனி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெற்றது கையோடு அன்னை பேராலய வளாகத்துக்குள் வந்து மணக்கோலத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 


மீசையை முறுக்கு... ஸ்டெர்லைட் ஆலையை நொறுக்கு என்ற வாசகம் தாங்கிய அட்டையை ஏந்திக் கொண்டு அவர்கள் கோஷமிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். தற்போது இவர்களது இந்த போராட்டமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.