திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை வழங்கியது. ஆட்சிக்கு வந்த பிறகு 505 வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுகவினர் கூறிவருகின்றனர். ஆனால், திமுக தனது வாக்குறுதிகளில் கூறிய பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதனால், திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற திமுகவின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது. 


திமுக வெற்றி பெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். 


மேலும் படிக்க | லாட்ஜாக மாறிவிட்டதா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்?


இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ