காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக ராணுவ வீரரின் உடலானது மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டதால், பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் அங்கு குவிந்து காணப்பட்டனர். 


மேலும் படிக்க | சசிகலாவுக்கு நிவாரணம்: வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்


இவர்களை கண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசு நிகழ்ச்சிக்கு இவர்கள் ஏன் கூட்டமாக வந்துள்ளனர் என கேள்வி எழுப்பினார். இதனால் அமைச்சருக்குக்கும் பாஜக கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டார். 


அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் இருபக்கமும் நின்று கோஷமிட்டனர். பின்னர் அமைச்சரின் காருக்கு முன்னாள் பாஜகவினர் திரண்டனர்.  இந்நிலையில் கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் அமைச்சரின் கார் மீது காலனியை வீசினார். 


பின்னர் பாஜகவினர் தங்களது கைகளால் அமைச்சரின் வாகனத்தை தாக்கத்தொடங்கினர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தி அமைச்சரின் வாகனத்தை அனுப்பி வைத்தனர். மேலும், அமைச்சரின் வாகனத்தின் மீது காலணி வீசிய நபரை பிடித்து காவல்துறையினர் விசாரிப்பதாக தகவல் வெளியானது.


இதையடுத்து, அமைச்சர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சீமான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வாகனத்தின் மீது காலணியை எறிந்தவர் குறித்து பதிவிட்டுள்ளார்.


அவரது அப்பதிவில், காலணி எரிந்தவரை சின்றெல்லா என்று குறிப்பிட்டுள்ள அவர், காலணி பத்திரமாக இருப்பதாகவும் காலணி வேண்டுமானால் வந்து வாங்கிச்செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


 



மேலும் படிக்க | ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்; மகிழ்ச்சியில் உறவினர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ