புதுச்சேரியில் மீன் பிடிக்க சென்ற மீனவரின் வலையில் ராக்கெட்டின் பாகம் ஒன்று சிக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் நேற்று காலை கடலில் வலையை வீசினர். அப்போது வலையில் ஏதோ கடினமான பொருள் சிக்கியிருப்பதை உணர்ந்த அவர் முடியாததால், திமிங்கலம் போன்ற ராட்சத மீனாக இருக்கலாம் எனக் கருதி கரையில் இருந்த மற்ற மீனவர்களை உதவிக்கு அழைத்து, வலையை கரைக்கு இழுத்து வந்தனர்.


கரைக்கு கொண்டு வரப்பட்ட அந்த பொருள் ஒரு ராக்கெட்டின் பகுதியாகும். 30 அடி நீளத்தில் இருந்த இந்த உதிரி பாகத்தின் மேல்பகுதியில் பி.எஸ்.ஓ.எம்.எக்ஸ்.எல். தேதி 22.03.02019 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.


இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் போலீசார், வலையில் சிக்கிய ராக்கெட் பாகத்தை ஆய்வு செய்தனர். அதில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, கடந்த மார்ச் 22ம் தேதி, பூமியை கண்காணிக்க 'RISAT2B' என்ற செயற்கை கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் அல்லது கடந்த ஏப்ரல் 1ம் தேதி எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டில் பயன்படுத்திய பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.