புதுச்சேரி அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசிதழ் பதிவுபெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க புதுவை அரசு ஒப்புதல் அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுத்தொடர்பாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...


"புதுச்சேரி அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசிதழ் பதிவுபெறாத B-பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து C-பிரிவு ஊழியர்களுக்கு இந்த நிதியாண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான ஒப்புதலை எனது அரசு வழங்கியுள்ளது.



இதற்கான அரசாணை நிதித்துறையான் மூலம் வெளியிடப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கப்படும். இதன்படி, அரசுத்துறைகளில் பணிபுரியும் B-பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து C-பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அதிகபட்சமாக ₹.6908/- வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகப்பட்சமாக ₹.1,184/- வழங்கப்படும்.


இதற்காக புதுச்சேரி அரசுக்கு ₹.18 கோடி கூடுதலாக செலவாகும். உற்பத்தி சார்ந்த அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படவேண்டி போனஸ் தொகை குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டவுடன், அது குறித்து அறிவிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்!