புதுச்சேரி மாநில மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது: நாராயணசாமி
ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மத்திய அரசு அளித்த அதிகாரத்தை புதுச்சேரி ஆளுநர் பயன்படுத்தி அரசின் அதிகாரத்தில் அதிக அளவில் தலையீடு செய்கிறார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது யூனியன் பிரதேச அரசுக்கு பெரும் சிக்கலை தருகிறது. மத்திய அரசு அளித்த அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடவும், அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. யூனியன் பிரதேச ஆளுநருக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அதிகாரம் செல்லாது எனக்கூறிய நீதிபதி, 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு அளித்த அதிகாரத்தை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரி மாநில மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.