தமிழகதின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான நோட்டீஸ் ஒன்றை கடந்த 28-ந் தேதி புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உரிமையான 100 ஏக்கர் நிலம் மற்றும் குவாரி ஆகியவற்றை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கபட்டுள்ள நிலையில் தமிழக அரசு, புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலாவை விருதுநகருக்கு இடமாற்றம் செய்வதாக இன்று திடீர் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு காரைக்குடியைச்சேர்ந்த ஒருவர் பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கும் பணிகள் நடைபெற்று வரும்நிலையில் பதிவாளர் திடீரென பணியிடமாற்றம் செய்த விவகாரம் மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.