கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா
கோவையில் நடைபெற்ற பஞ்சாபி உணவு திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் பொருட்களை கொண்டு தயாரான நூறுக்கும் மேற்பட்ட பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்த பொதுமக்கள்.
கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் தனியார் கல்லூரி உணவு த்துறை அறிவியல் மற்றும் உணவக மேலாண்மைத்துறை சார்பாக, இந்திய உணவுகளின் பாரம்பரிய சிறப்பை எடுத்து காட்டும் விதமாக கிச்சன் கார்னிவல் எனும் உணவு திருவிழா நடைபெற்றது. 'ஓயே பஞ்சாபி உணவுத்திருவிழா' எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய உணவு மற்றும் கலாச்சார சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டன.
மேலும், ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, இந்தியாவில் விளையும் மைக்ரோகிரீன்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு உணவுகள் மற்றும் அது குறித்த பயன்களும் காட்சிப் படுத்தப்பட்டன.
மேலும் படிக்க | "சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்
உணவு திருவிழாவில், பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளாக சாலட், சட்னி வகைகள், தந்தூரி வகை ரொட்டிகள், ரைத்தா எனும் தயிர் உணவுகள், இனிப்பு என பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக, அசைவ உணவு வகைகளாக, வறுத்த சிக்கன், அங்கார சிக்கன், பட்டியாலா தவா மீன் உள்ளிட்ட 'ஸ்டார்டர்ஸ்' வகைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டன.
பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு, நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பஞ்சாப் உணவு அருந்தியபடி ரசித்தனர். மாலை துவங்கிய உணவு திருவிழாவில், கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு? ஷாக்கிங் அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ