வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக - பாமக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இன்று கூட்டணி தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இரு கட்சிகளும், சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்துக்கு கிருஷ்ணசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். அங்கு அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் காத்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டு, உடன்படிக்கை தயாரானது.


அந்த உடன்படிக்கையை ஓ.பி.எஸ். செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்தார். ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அதன்படி, புதிய தமிழகத்துக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்து நடக்கவுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் ஆதரவு கொடுக்கும்' என்று தெரிவித்தார்.