ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக தென்னக ரயில்வே புதிய அறிவிப்பு...!
800 ரயில் பயணிகளுக்கு 2 நாளாக உணவு அளித்த ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக தென்னக ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ரயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பயணிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் மற்றும் புதுக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து ரயில் பயணிகளுக்கு உணவு அளித்தனர்.
மேலும் படிக்க - ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தென்னக ரயில்வே மேலாளர் இடம் தங்களது பகுதி வழியாக பாலக்காடு வரை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது எனவும் இந்த ரயிலை ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் தென்னக ரயில்வே மேலாளர் இடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கு உணவளித்த ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் சோதனை முறையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வரும் குடியரசு தினமான 26ம் தேதியிலிருந்து வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வரை அதாவது மூன்று மாத காலத்திற்கு சோதனை முறையில் இந்த ரயிலானது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஸ்ரீவைகுண்டம் மக்களின் நற்செயலை பாராட்டி நன்றி கடன் செலுத்தும் விதமாக தென்னக ரயில்வே எடுத்த இந்த அதிரடி முடிவு ஸ்ரீவைகுண்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க - எடப்பாடி பழனிசாமி போடும் அரசியல் கணக்கு..! பாஜக கப்சிப் - அதிமுகவுக்கு கைகொடுக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ