மீண்டும் தமிழகத்தை மிரட்டும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுவதாகவும், வருகிற 6 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் 4, 5, 6 ஆம் தேதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.