தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்,
தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணாமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
அதிகபட்சமாக நாகையில் 14 செ.மீ., காரைக்காலில் 13 செ.மீ. மழை பதிவானது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி, கல்லக்குடி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
என்று குறிப்பிட்டார்.