கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 13.12.2023 மற்றும் 14.12.2023 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  15.12.2023 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 16.12.2023 மற்றும் 17.12.2023 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம் பெண் இறப்பு - கணவர் குடும்பத்தார் மீது சந்தேகம்?



கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 18.12.2023 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  19.12.2023 என்று  தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


வால்பாறை P.T.O (கோயம்புத்தூர் மாவட்டம்) 3, சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்) 2, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்), பார்வூட் (நீலகிரி மாவட்டம்), நாலுமூக்கு (திருநெல்வேலி மாவட்டம்) தலா 1.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


அரபிக்கடல் பகுதியில் 14.12.2023 முதல் 16.12.2023 வரை  குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.  மேலும் விவரங்களுக்கு mausam.imd.gov.in/chennai  இணையதளத்தை பார்க்க அறிவுறுத்தப்படுகிறது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க - மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மருமகள்! அதிர்ச்சிப் பின்னணி!