சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதன் காரணமாக, 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


இந்நிலையில், சென்னையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் பெய்துள்ளது. தொடர்ந்து இன்று காலையில் இருந்தும் கனமழை பெய்து வருகிறது.



சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.  மேலும் மழைநீர் தேங்கி இருந்தால் 044-25384520, 044-25384530, 044-25384540 மற்றும் 94454-77205 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.