ரஜினி தனிக்கட்சித்தான் தொடங்கவேண்டும்: திருநாவுக்கரசர்
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தேசிய கட்சிகளுடன் இணையாமல் தனியாக ஒரு கட்சி தொடங்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் நிகழ்ச்சியை ஒட்டி அவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியத்தைச் செலுத்தினார் திருநாவுக்கரசர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
தமிழகத்திற்கு நல்ல பல கல்வித் திட்டங்களைத் தந்தவர் ராஜீவ் காந்தி. ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவர் தேசியக் கட்சிகளுடன் இணைய மாட்டார். தனிக்கட்சித்தான் தொடங்கவேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்