ரஜினிக்கு ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிட்டது; அரசியல் வரலாறு தெரியாத ரஜினிகாந்த் என அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இந்த நிலசியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, திமுக தலைவர் கருணாநிதி இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா? என்று விமர்சித்துள்ளார்.


இதையடுத்து, ரஜினியின் இந்த விமர்சனத்திற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பதிலடிகொடுத்துள்ளார். அவர், "ஒருவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது சரியல்ல. அப்படி பேசிய ரஜினிக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஒருவர் அரசியல் பேச வேண்டும் என்றால் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். நடிகர் ரஜினிக்கு ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது. பார்ட் டைம் அரசியல்வாதியான ரஜினி ஃபுல் டைம் அரசியல்வாதியாக முயற்சிக்கிறார். 



இதுவே, எம்.ஜி.ஆரும் , ஜெயலலிதாவும் இருக்கும் போது இப்படி பேசிவிட்டு ரஜினிகாந்த் நடமாடி இருக்க முடியுமா?. அவர்கள் இல்லாத போது ரஜினி இப்படி பேசுவது அவரின் கோழைத்தனம் மற்றும் சந்தர்ப்பவாதத்தை காட்டுகிறது. மறைந்த தலைவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசு கொடுத்தது. திமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்கவே ரஜினிகாந்த் அதிமுகவை விமர்சிக்கிறார் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.