கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சுக்கு கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு!
இந்து தீவிரவாதி குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
இந்து தீவிரவாதி குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் எனக் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கேட்ட போது, அவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
,