மதிப்புமிக்க கவுர விருதினை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக பிரகாஷ் ஜவடேக்கர் அறிவித்துள்ளார். கோவாவில் நவம்பர் 20 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 வரை நடக்கும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Icon of Golden Jubliee’ என்ற பெயரில் ரஜினிக்கு, சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. இந்த மதிப்புமிக்க கவுர விருதினை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி கூறுவதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  


இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளா ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; "50-வது சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழாவை முன்னிட்டு, மத்திய அரசு வழங்கும் உயரிய கவுரவத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இம்மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.