காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ராமர் கோயில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்பு செய்ய எல்இடி திரை வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொது இடத்தில் இவ்வாறு செய்வதற்கு முன் அனுமதி பெறாததால் அந்த எல்இடி திரையை காவல்துறையினர் அகற்றினர். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக அந்த கோயிலுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்ததுடன், ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன் அதிகார மீறலில் காவல்துறை ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், " அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தமிழகத்தில் கோவில்களை திமுக அரசு தவறாக பயன்படுத்துகிறது. இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடுகிறது.  கோவில்களில் வழிபாடு செய்ய ஒவ்வொரு இந்துக்கும் உரிமை உண்டு. பிரதமர் பங்கேற்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் அனைவரும் பார்க்க விரும்புவார்கள். பிரதமர் மீதான தனிப்பட்ட வெறுப்பை காரணம் காட்டி பக்தர்களை வஞ்சிக்கிறார்கள். இந்துக்கள் உரிமையும், எனது உரிமையும் பறிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!


திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது" என குற்றம்சாட்டினார். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை கொடுத்துள்ள விளக்கத்தில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி திரை வைக்க அனுமதி கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஜனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறுவதாக கூறி
அனுமதி கோரப்பட்டிருந்தது தெரிவித்துள்ள காஞ்சிபுரம் காவல்துறை, பஜனை நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர் என்றும் விளக்கம் அளித்துள்ளது. 


இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சண்முகம் தெரிவிக்கையில்,காமாட்சி அம்மன்கோவிலில் பஜனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதி பெறப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை  திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என்று கடிதம் கொடுத்து இருந்தனர். கோவிலில் பஜனை, அன்னதானம், சிறப்பு வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றார்.


நேரடி ஒளிபரப்பு செய்யமாட்டோம் என கடிதத்தில் கொடுத்துவிட்டு, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சி நேரலைக்கு ஏற்பாடு செய்தது ஏன்?, முறையான அனுமதி பெறாத நிகழ்வுக்கு காவல்துறை தடை விதித்தது எந்த வகையில் தவறு?, உடனே ராமர் கோயில் திறப்பு விழா நேரலைக்கு காவல்துறை அனுமதி மறுத்தது போன்றும், பக்தர்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பது போன்றும் சித்தரிக்கப்படுவது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 


மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் நித்தியானந்தா! அவரே வெளியிட்ட பதிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ