முன்னாள் தமிழக தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ராமமோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தப்பட்டது. அவரது வீடுகள், அலு வலகங்களில் சோதனை நடத்தி ரூ.5 கோடி தங்கம், ரூ.30 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம மோகனராவின் மகன் விவேக் வீட்டில் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களது வீடுகளில் நேற்றும் 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் ஏராள மான சொத்து ஆவணங்களும் சிக்கியுள்ளன.மீட்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் கணக்கிட்டு வருகிறார்கள். அடுத்த கட்டமாக இந்த நகைகள், பணம் எப்படி வந்தது? எத்தகைய வருவாய் மூலம் சம்பாதிக்கப்பட்டது? என்ற விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ராமமோகன ராவிடமும் அவரது மகன் விவேக் கிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணை தகவல்கள் மற்றும் உறவினர்களிடம் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு அறிக்கையாக தயாரித்துள்ளனர். அந்த அறிக்கையை இன்று அமலாக்கத் துறையிடம் வருமான வரித்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.


ராமமோகன ராவின் தொலைபேசி உரையாடல்கள் மிக முக்கியமான ஆதாரமாக கருதப்படுகிறது. ராமமோகன ராவின் கம்ப்யூட்டரிலும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாம். மேலும் ரகசிய அறையில் கிடைத்த ஆவணங்களும் மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ராமமோகன ராவ் மீது தொடர்ந்து விசாரணை நடைபெறுவதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


இதன் காரணமாக ராம மோகன ராவ், மகன் விவேக் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் வர உள்ளனர்.