மது விற்பனை நேரத்தை குறையுங்கள் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மது விற்பனை செய்யப்படும் நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று ஐ.கோர்ட்டு பரிந்துரை வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பா.ம.க. நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், 2021 தேர்தலில் அது குறித்த வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்று கூறி அரசு நழுவிக்கொள்கிறது. இதையும் படியுங்கள்: கோகுல்ராஜ் கொலை வழக்கு: திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு சட்டப்பேரவைத் தேர்தலில் அத்தகைய வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்றாலும் கூட, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன்முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மதுவிலக்கை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது என்பது தான் அதன் பொருள்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பெண் காவலர் பாலியல் தொல்லை: செய்தியாளர் சந்திப்பில் டிஜிபி சைலேந்திரபாபு பளிச் பதில்
மேலும் படிக்க | நாங்கள் அண்ணாவின் வழி வந்தவர்கள்... தமிழ்நாடு தான் சரி - ஜெயக்குமார் கிளியர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ