தமிழக சட்டப்பேரவையில் வரும் ஜூலை 19-ஆம் நாள் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம் திறந்துவைக்கப் படவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வன்னியகுல சத்திரிய பொதுச் சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அகில இந்திய வன்னியகுல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் முதல்வருக்கும், துணை முதுல்வருக்கும் பாராட்டு விழா நடைப்பெற்றது. 
இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு உருவ படம் திறந்துவைக்கப்படும் என அறிவித்திருந்தார்.


சுதந்திர போராட்ட வீரரும், மூத்த அரசியல்வாதியுமான ராமசாமி படையாச்சியாருக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நினைவுமண்டபத்திற்கு தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.


இதேப்போல் ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி ராமசாமி படையாச்சியாரின் திருவுருவ படம் சட்டப்பேரவையில் தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்படவுள்ளது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமரும் 5-வது மற்றும் 6-வது பாகத்துக்கு இடையே இந்த படம் அமைக்கப்படவுள்ளது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.