ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாசி மகாசிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கங்கை நீருடன் பக்தர்கள் ஊர்வலம் சென்று தரிசனம் செய்தனர். காசிவராத்திரியையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


இந்த வருட மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 10-வது நாள் திருவிழா அன்று மாசி அமாவாசையை முன்னிட்டு சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தொடர்ந்து சாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பாடாகி கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர்பாத மண்டகப்படிக்கு எழுந்தருளுகின்றனர்.


இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவின் 12 நாள் கொண்டாட்டங்களின் போது ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தேர் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.