நவம்பர் 1 முதல் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், மத்திய அரசு கொடுத்த டைம் முடிஞ்சுது
Ration Card | ரேஷன் கார்டில் ஆதார் உள்ளிட்ட தகவல்களை இணைக்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படும். நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.
Ration Card Latest News Tamil | ரேஷன் கார்டில் Know Your Customer (KYC)-ஐ மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மோசடிகளை தடுக்க, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் தகவல்களையும் உறுதிப்படுத்த அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அக்டோபர் 31 ஆம் தேதி வரை காலவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அந்த தேதிக்குள் கேஒய்சி அப்டேட் செய்யாத ரேஷன் கார்டுகளில் உள்ள பெயர்கள் தானாகவே நீக்கப்படும்.
ரேஷன் கார்டு அப்டேட் ஏன்?
இந்தியாவில் உள்ள ரேஷன் கார்டு பயனாளிகளின் உண்மை தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கார்டுகளில் இருக்கும் உறுப்பினர்களின் தகவல்களை அப்டேட் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருகிறது. ஒருரேஷன் கார்டில் எத்தனை பெயர்கள் இருந்தாலும் அவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட தகவல்களை ஆவணமாக சமர்பிக்க வேண்டும். இந்த செயல்முறைக்கான காலவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீட்டித்திருக்கிறது. இப்போது அக்டோபர் 31 ஆம் தேதி வரை ரேஷன் கார்டு அப்டேட்டுக்கு டைம் கொடுத்திருக்கிறது. அதற்குள் ஆதார் உள்ளிட்ட தகவல்களை கொடுக்காத குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை தானாகவே ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படும். இருப்பினும் இந்த ரேஷன் கார்டு கேஒய்சி அப்டேட்டுக்கு ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேக காலவகாசத்தையும் கொடுத்திருக்கின்றன.
ரேஷன் கார்டு பயனாளிகள் மோசடி
இந்தியாவில் ரேஷன் கார்டு மூலம் ஒவ்வொரு மாநில அரசும் அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருகளையும் மலிவு விலையில் கொடுக்கின்றன. அத்துடன் அரசின் முக்கிய ஆவணமாகவும் இருக்கும் ரேஷன் அட்டையை வைத்து பல்வேறு நலத்திட்டங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். அதாவது ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்ப வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் வறுமை கோட்டிக்கு கீழ் உள்ளவர்கள், மேல் உள்ளவர்கள் என்பதை குறிக்கும் வகையில் முன்னுரிமை அட்டைகள் (PHH), 2.முன்னுரிமை (PHH-AAY), 3. முன்னுரிமையற்ற அட்டைகள் (NPHH), 4. சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S), 5. பொருளில்லா அட்டை (NPHH-NC) என நான்கு விதமான கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த கார்டுகள் மூலம் பயனாளிகளை கண்டறிந்து மகளிர் உதவித் தொகை, பொங்கல் பரிசு உள்ளிட்ட நலத்திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்
மத்திய அரசு திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாகும். ஆனால் சிலர் மோசடியாக ரேஷன் கார்டு பெற்று இந்த திட்டங்களின் பலன்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களை கண்டறிந்து களையெடுக்கும் வகையிலும், இரண்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கண்டறியும் விதமாகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அரசு அறிவுறுத்தலின்படி ஆதார் கார்டு உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ரேஷன் கார்டு கேஒய்சி அப்டேட் செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படுவது உறுதி. இதுகுறித்து அருகில் இருக்கும் நியாய விலைக் கடைகளில் விவரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
அரசு இ-சேவை மையங்கள்
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என்பவர்கள் https://tnpds.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் அருகில் இருக்கும் அரசு இசேவை மையங்களுக்கு சென்றும் ரேஷன் கார்டில் கேஓய்சி அப்டேட் செய்து கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ