தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது: தேசிய பட்டியலின ஆணையம்
வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை செய்த பின்னர் தேசிய பட்டியலின ஆணைய இயக்குனர் ரவிவர்மன் பேட்டி அளித்தார்.
வேங்கைவயல் தொடர்பான எனது அறிக்கையை மூன்று தினங்களில் ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிப்பேன் எனவேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை செய்த பின்னர் தேசிய பட்டியல் இனத்து ஆணைய இயக்குனர் ரவிவர்மன் பேட்டி அளித்தார்.
தேசிய பட்டியல் அனைத்து ஆணைய இயக்குனர் ரவிவர்மன் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை செய்வதற்காக வருகை தந்து வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சம்பவம் நடைபெற்ற போது என்ன நடந்தது காவல்துறை விசாரணை எவ்வாறு நடைபெற்று வருகிறது உங்களுடைய கோரிக்கைகள் என்ன என்பது குறித்து கேட்டு அறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய இயக்குனர் ரவிவர்மன் கூறியதாவது:
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். ஆணையம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிக்கையை ஆணையத் தலைவருக்கு சமர்ப்பிக்கும். ஆணைய தலைவர் இது குறித்து முடிவெடுப்பார். சிபிசிஐடி போலீசார் மனிதக் கழிவுகள் கலந்த நீரை சாம்பிள் எடுத்த விதம் தவறு. இதேபோன்று டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் எடுத்தது தவறு என்றார்.
மேலும், உண்மை கண்டறியும் சோதனை மட்டுமே இதற்கு தீர்வாகும் சிபிசிஐடி போலீசார் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே குறிவைத்து இந்த விசாரணையானது நடைபெற்று வருவதாக ஆணையம் கருதுகிறது என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொடர்ந்து பட்டியல் இனத்து மக்கள் மீது தாக்குதல் என்பது நடைபெற்று வருகிறது இதன் மேல் உள்ள புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இது போன்ற செயல்களை தடுக்க முடியும் வழக்கு பதிவு செய்வதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் போராட வேண்டிய நிலை உள்ளது.
முரசொலி வழக்கு தொடர்பாக கேட்கையில், முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பாக ஆணைய தலைமை தான் விசாரணையை நடத்த முடியும் இது குறித்து எப்போது விசாரி நடக்கும் என்பது கருத்தையும் அவர்கள் தான் முடிவு செய்ய முடியும் என்றார்
வேங்கைவையல் தொடர்பான எனது அறிக்கையை மூன்று தினங்களில் ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிப்பேன் எனக் கூறிய அவர் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சில நபர்கள் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் இதுவரை எந்த விசாரணை நடத்தவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற போது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்தநீரை மாதிரி பரிசோதனைக்கு எடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் அதிக அளவு நீரில் கழிவு கலந்ததால் சோதனை முடிவு சரியாக இருக்காது. எனவே அவ்வாறு செய்தது தவறு பாதிக்கப்பட்ட மக்களிடமே டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த பகுதி மக்கள் ஆணையத்திடம் தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு தொடர்பாகவும் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையும் நீதிமன்றத்தில் இருந்து கேட்டு பெறப்படும் எனவும் கூறிய ஆணைய இயக்குனர் ரவிவர்மன், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தொடர்ந்து தேசிய பட்டினத்து ஆணையத்திடம் அறிக்கையாக அளித்துக் கொண்டிருந்தார் விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை! என்ன அம்சங்கள் இடம் பெரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ