நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், இன்று (நவ.,25) பிற்பகலில் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
ALSO READ ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு!
திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால், சாலையில் தண்ணீர் தேங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோயிலில் மழைநீர் புகுந்தது. இதனால், பிரகாரம் மூழுதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடியில் 25 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களிலும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ தொடர் மழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், நாளை (நவ.,26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.