புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ஆம் தேதி வடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தமான் கடல்பகுதி மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து கேரளாவில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் பலத்த மழை (Heavy rain) பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. 


இதை தொடர்ந்து, அடுத்த வாரம் கேரளாவின் பத்தனம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. மேலும், இடுக்கி உள்ளிட்ட சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் ,திருவனந்தபுரம், கொல்லம், உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | அடுத்த வாரமும் ஆரவாரம்: வருகிறது அடுத்த புயல் என எச்சரித்தது IMD


இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில்., மத்திய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.


இதன் காரணமாக டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதீத கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தென் தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.