தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்- இந்திய வானிலை மையம்
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளும் மிக கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை தற்போது பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அத்துடன் பொது மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இன்று தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய (TN Weather updates) காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என தெரிகிறது. இதனால் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவலை இந்திய வானிலை மையம் (India Meteorological Department) செய்தி குறிப்பில் வெளியிட்டு உள்ளது. அதில்.,
ALSO READ | LIVE: தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட்- பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை
இன்றைய தினம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும். இந்த வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ள காரணத்தால் தமிழகத்தில் நாளை (நவம்பர் 10) மற்றும் நாளை மறுநாளும் (நவம்பர் 11) ரெட் அலர்ட் (Red Alert ) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்றைய தினம் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மழையின் அளவு குறையும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் பேரிடர் மீட்பு படையினரும் அரசும் உடனடியாக வெள்ளப் பாதிப்பை தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது போல் ஆழ்கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களையும் உடனடியாக கரை திரும்புமாறு கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் திருநெல்வேலி, கோவை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR