தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கீழகோவில்பத்து கிராமத்தில், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(53). இவர் நேற்று அதிகாலை இறந்துள்ளார். வடபாதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு வழியாக நேற்று மாலை இறந்த சீனிவாசன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர். அதற்கு, வடபாதி ஆதிதிராவிடர் தெருவினர், திருமண வரவேற்பு விழா நடப்பதால், வேறு வழியாக செல்ல கூறியுள்ளனர். ஆனால், சீனிவாசன் உடலை அந்த தெரு வழியாக தான் எடுத்து செல்வோம் என கூறி, சீனிவாசன் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து உடலை கொண்டு போக கூடாது என கூறி, ஒரு தரப்பினர் டாடா ஏசி வாகனத்தை போட்டு ரோட்டை மறித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சீனிவாசன் உறவினர்களுக்கும், கீழகோவில்பத்து ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முதல்வர் இல்லாத நேரத்தில் வேண்டுமென்றே நடத்தப்படும் ரெய்டு இது-ஆர்.எஸ் பாரதி



இதையடுத்து இரு தரப்பினரும் கற்களையும், கட்டையையும் வீசி ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது.  இதில் சிலர் காயமடைந்தனர். இருப்பினும் சீனிவாசன் உடலை நடுரேராட்டில் வைத்து விட்டு, அவரது உறவினர்கள், நாகை – திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சீனிவாசன் உடலை கீழகோவில்பத்து ஆதிதிராவிடர் தெரு வழியாக தான் இடுகாட்டிற்கு கொண்டு செல்வோம் என கூறி தகராறில் ஈடுபட்டனர். இதில், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழனின் ஜீப் மீீது கற்களை கொண்டு தாக்கி உடைந்தனர். மேலும், தனியார் பஸ் ஒன்றையும் கண்ணாடியை உடைத்துள்ளனர்.  



கிராமம் கலவரமாக மாறியதால், போலீஸ் அதிவிரைப்படையினர் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் குவிக்கப்பட்டனர்.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாபாநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் டி.எஸ்.பி., பூர்ணிமா, கும்பகோணம் டி.எஸ்.பி.,மகேஷ்குமார், தஞ்சாவூர் சிறப்பு டி.எஸ்.பி.,பாலாஜி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில், கீழகோவில்பத்து ஆதிதிராவிடர் தெருவழியாக சீனிவாசன் உடலை போலீஸ் பாதுகாப்புடன் அவரது உறவினர்கள் எடுத்து  சென்று தகனம் செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


மேலும் படிக்க | ஐடி ரெய்டு அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது ஏன்...? - செந்தில் பாலாஜி கேள்வி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ