கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தலா 50-கிலோ எடை கொண்ட 480 அரிசி மூட்டைகள், தேனி மாவட்ட கழகத்தின் சார்பில் ரூ 30 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 


இந்த நிவாரண பொருட்களை இடுக்கி கோட்டாட்சியர், உடும்பஞ்சோலை வட்டாட்சியரிடம் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஒப்படைத்துள்ளார்.


கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.


இதுவரை கேரளா வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 370-ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கேரளாவில் காஸர்காட் மாவட்டத்தை தவிர 13 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும் வயநாடு மற்றும் பத்தனம் தட்டா பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



எதிர்பார மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பல்லாயிரம் கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவு நாடுமுழுவதிலும் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.


அந்த வகையில் இன்று தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கேரளவிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது