சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பல இடங்களில் விதிகள் மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அளித்த புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச்1-ம் தேதி  விசாரணை மேற்கொண்டது.


விசாரணையின் போது, போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்கிறது? விதிகள் மீறி பேனர்கள் வைக்க ஏன் அனுமதி தரப்படுகிறது? அப்படி வைக்கப்பட்ட பேனர்கள் எப்பொழுது அகற்றப்படும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினர் நீதிபதி.


இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு வரும் 5-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.


இந்நிலையில், சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.


விதிமீறல் பேனர் குறித்து உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.