நாட்டின் 72 ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் நடக்கும் அணிவகுப்புகளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் துறைகளின் ஊர்திகள் பங்குகொண்டு தங்கள் சாதனைகளையும் வரலாற்றையும் எடுத்துக்காட்டுவது வழக்கம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு நடக்கவுள்ள விழாவில், சமீபத்தில் அணிவகுப்பில் இருந்து தமிழகத்தின் ஊர்திகள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும், பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். 


ALSO READ | தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்!


இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 


இந்த கடிதத்தில், “குடியரசு தின (Republic Day) அணிவகுப்பில் பங்கேற்கும் ஊர்திகளை தேர்ந்தெடுப்பதற்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.  குடியரசுத் தின விழாவில் பங்கேற்கும் அணிவகுப்பு ஊர்திகளை பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகே நிபுணர் குழு முடிவு செய்கிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு உட்பட 29 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கான முன்வடிவு பெறப்பட்டது. முதல் 3 சுற்றுகளில் தமிழ்நாடு ஊர்திகள் பரிசீலிக்கப்பட்டன. அடுத்தடுத்த சுற்றுகளில் உள்ள விதிகளின்படி தமிழ்நாடு ஊர்திகள் இந்த முறை ஏற்கப்படவில்லை. மேலும், கடந்த 2017, 19, 20,21 ஆம் ஆண்டுகளில் தமிழக ஊர்திகள் குடியரசு தின விழாவில் இடம்பெற்றதை நினைவூட்ட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 



இதற்கிடையில் தமிழக அலங்கார ஊர்திகள் குடியரசு தின ஊர்வலத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல கட்சிகள் இதற்கு எதிராக கண்டனங்களை எழுப்பியுள்ளன. இதற்கிடையில், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் கடிதம்:



ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஜனவரி-26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நாளில் இந்தியாவின் பெருமைகளான கலை, பண்பாடு, நாகரீகம் போன்ற பலவித அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும், துறைகளிலிருந்தும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் பங்கேற்று பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்தை நிராகரித்த மத்திய அரசு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR