திமுகவின் சட்டவிதிகளில் திருத்தம் செய்து புதிய தீர்மானங்களை பொதுச்செயலாளர் அறிவிப்பு...!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து, தற்போது திமுக-வின் தலைவருக்கான தேர்தல் இன்று நடத்தப்படவுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 26 ஆம் நாள் மாலை 4 மணிக்குள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 


கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, திமுக பொதுக்குழு இன்று கூடும் என்று பொதுச் செயலாளர் அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதில், தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதில் கட்சியின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.


இந்நிலையில், தி.மு.க வரலாற்றில் இரண்டாவது தலைவராக இன்று நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவர் கட்சியினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். பின்னர் அவர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 
 
இதனையடுத்து மு.க.ஸ்டாலின் வகித்து வந்த செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக க. அன்பழகன் அறிவித்தார். மேலும், திராவிட முன்னேற்ற கழகத்தில் புத்தாக தகவல் தொழில்நுட்ப அணி என்று புதிதாக ஒரு அணியை அறிமுகம் செய்துள்ளனர். 
 
மேலும், மாவட்ட தலைநகரங்களில் தான் கட்சி அலுவலகம் அமைய வேண்டும் என்ற புதிய விதிமுறைகளையும் அறிவித்துள்ளனர்....!