#ஆர்கேநகர் இடைத்தேர்தல்: மதுசூதனன் மனு தாக்கல் செய்தார்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்கேநகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது.
சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்கேநகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது.
இதில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் லோகநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், என்தேசம்- என் உரிமை கட்சி வேட்பாளர் ஜெயந்திசந்திரன் ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மா.பா. பாண்டியராஜன், பா.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். இன்று பிற்பகலில் டி.டி.வி.தினகரன், தீபா, பாஜக வேட்பாளர் கங்கைஅமரன் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.