ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அவர் சட்டசபை உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. பொதுவாக காலியாகும் தொகுதிக்கு அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஆர்.கே.நகர் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.


இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இடை தேர்தல்கள் ஏப்., மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜுலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கான தேர்தலில் இந்தியாவில் உள்ள 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டு போட தகுதியுடையவராகிறார்கள், இதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்காக இடைதேர்தல் பணிகள் அவசர வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது.