ஆர்.கே.நகர் தேர்தல்: அதிமுக மாபெரும் வெற்றி பெரும் -டி.டி.வி. தினகரன்
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெரும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக என்பது அம்மாவின் வழிகாட்டுதலின் படி செயல்படும் இயக்கமாகும். ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றியை பெறும். அப்போது அதிமுக மீது நீங்கள் கொண்டுள்ள சந்தேகங்கள் அனைத்துக்கும் விடை கிடைக்கும். அதிமுக கட்டுகோப்புடன் உள்ள இயக்கமாகும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் தயங்குகிறேனா? எங்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது. ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்ற குழு விரைவில் முடிவு செய்யும். வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர் முழு மனதுடன் போட்டியிடுவார். தேர்தலை சந்திக்க நாங்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறோம். எந்த பணியையும் செய்ய அதிமுக தொண்டர்கள் தயங்க மாட்டார்கள் என டி.டி.வி. தினகரன் கூறினார்.