ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகும்: ஜெயானந்த் முகநூல் பதிவு!
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையமே உத்தரவிடும் என்று ஜெயானந்த் திவாகரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி,
சுயேச்சைகள் என அனைவரும் இதில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது; ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையமே ரத்து செய்ய உத்தரவிடும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை என்றாலும், இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.