முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.


இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது விஷால் போட்டியிடுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனக்கு விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் அனுமதி கேட்டுள்ளார். 


 



 


இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னதாக காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஷால், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்றும் மரியாதை செய்திருந்தார். 


மேலும் ஆர்கேநகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது டிவிட்டடில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில்,


விஷாலில் அரசியலில் நுழைவது  இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். டெல்லி வரும் போது நேரில் பார்க்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட் செய்துள்ளார்.