சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் தேர்தல் அதிகாரியாக வேலுச்சாமி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தி.மு.க உள்பட ஏராளமான கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 


இதையடுத்து, நடிகர் விஷாலின் வேட்புமனுவை வேலுச்சாமி நிராகரித்தது சர்ச்சையானதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.