போலீஸூக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி தலைமறைவு
சீர்காழியில் விசாரணைக்கு அழைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கொலை மிரட்டல் விடுத்த ரவுடி தலைமறைவாகியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக அர்ஜூனன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் தன்னை வழிமறித்த வினோத் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரர் அர்ஜுனன், மணிமாறன் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த வினோத் என்பவரை விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க | ஜெ. மரண மர்மம் விலகுமா? - விசாரணை ஆணையத்தில் நாளை ஓ.பி.எஸ் ஆஜர்!
அப்போது வினோத்திற்கு ஆதரவாக தைக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து சிறப்பு காவல் ஆய்வாளர் அர்ஜுனன், செந்திலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துள்ளார். அப்போது தொலைபேசியில் சிறப்பு உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசிய செந்தில் கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், தன்னை இனிமேல் விசாரித்தால் அரை மணி நேரத்தில் குடும்பத்தோடு காலி செய்து விடுவேன் என கடுமையாக பேசி மிரட்டியுள்ளார்.
மேலும் படிக்க | ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து... ஆட்டம் பாட்டம் ; போலீஸ் வந்ததும் அப்படியே ஓட்டம்..!
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து ரவுடி செந்தில் மீது காவல் ஆய்வாளர் அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவான ரவுடி செந்திலை தேடி வருகின்றனர். வழக்கு விசாரனைக்கு அழைத்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை ரவுடி மிரட்டிய சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR